ஜவஹர்லால் நேரு கட்டுரை/ javarkalal nehru katturai in tamil/#tamilkaturai/தமிழ் கட்டுரை



முன்னுரை

                மனமும் உடையும் வெள்ளையப்பா - அதில்

                பூத்து நிற்பது ரோஜாவின் பாக்கியமப்பா... 

                 என்ற வைர வரிகளுக்கு சொந்தகாரர்.நம் மாமா நேரு அவர்கள். வாழ்வில் செல்வ  செழிப்பில் பிறந்தாலும்... நாட்டிற்காகவும். நாட்டு மக்களுக்காகவும் தம் வாழ்வையே   அர்பணித்த இந்திய தலைவர்களில் மிகவும்    முக்கியமானவர் ஜவஹர்லால் நேரு இவரின் வருகையால் தான் இந்திய    தாயின் வரலாற்று பக்கமே மாற்றம் கண்டது.  இவரின் செயலால் தான் சுதந்திர இந்தியா  புரட்சி பல கண்டது என்பதை வரலாறு நமக்கு

எண்பிக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு உன்னத தலைவரை பற்றி இக்கட்டுரையில்   காண்போம். 


நேருவின் குழந்தை பருவம்

மோதிலால் நேருவுக்கும், சொரூபராணிக்கும் 1889- ம் ஆண்டு நவம்பர் 14-ம் நாள் மூத்த மகனாக பிறந்தவர் தான் பண்டித ஜவஹர்லால் நேரு. நேருவின் தந்தை மிக சிறந்த வழக்கறிஞராகவும், மிக பெரிய செல்வந்தராகவும் விளங்கினார்.நேருவுக்கு நல்ல ஒரு வழிகாட்டியாகவும் ஆசானாகவும் இருந்தவர் மோதிலால் நேருவின் நண்பரும் சிறந்த

பண்டிதருமான முபாரக் அலி என்பவராவார் இவர் தான் சிறுவயதிலிருந்தே இந்திய சுதந்திர போர் பற்றிய அனைத்து தகவல்களையும்

ஜவஹர்லால் நேருவின் மனதில் விதைத்தவர். அது போல அரேபிய இரவு கதைகள்... சார்லஸ் - டிக்கன்ஸ், எ.சி.ஜி.வெல்ஸ் ,மார்க் ட்லைன்  ருட்யார்ட் போன்ற பல ஆங்கில எழுத்தாளர்களின் புத்தகங்களை பற்றியும் நேருவுக்கு கூறி உலக விசயங்கள்பலவற்றை சிறுவயதிலே நேரு தெரிந்துகொள்ள உதவினார். சிறு வயதிலே ஜவஹர் செல்வ சீமான் வீட்டு

குழந்தையாக வளர்ந்தார். எட்டுவயதிலேயே குதிரை சவாரி செய்ய கற்றுகொண்டார்.


இளமை துடிப்பில் நேரு


                 நேரு அவர்கள் தனது பதினைந்தாவது

வயது வரை எந்த பள்ளிகளிலும் சேர்ந்து அவர்  படிக்கவில்லை. ஆசிரியர்களை அவர் வீட்டிற்கே வர   வைத்து நேருவுக்கு கல்வி புகட்டினார் அவர் தந்தைநேருவின் ஆசிரியராக அவர் வீட்டிற்கு வந்த

பெரும்பாலானோர் ஆங்கிலேயர்களே..... அதனாலே நேருவின் நடை உடை பாவனை உணவு பழக்கம் அனைத்தும் ஆங்கிலேயரை போலவே அமைந்துவிட்டது.நேரு தனது பதினைந்தாவது வயதில் இங்கிலாந்து சென்று ஹாரோ பப்ளிக் ஸ்கூலில் தன்மேல்படிப்பை தொடர்ந்தார். அதன் பின் லண்டனில் உள்ள  புகழ் பெற்ற பல்கலைகழகமான கேம்ப்ரிட்ஜ்பல்கலைகழகத்தில் புவியியல், வேதியியல் தாவரவியல் பாடங்களை தேர்ந்தெடுத்து  படித்தார். கல்லூரி படிப்பை முடித்த ஜவஹர்

அடுத்து பாரிஸ்டர் பட்டமும் பெற்றார்.


மணவாழ்வில் இனிமை


      1916-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ம் நாளன்று  ஜவஹர்லால் நேருவுக்கும் கமலா என்ற பெண்ணிற்கும் மிக ஆடம்பரமாக திருமணம் நடந்ததுஇருவரின் இல்லற வாழ்வில் இனிமையாக 1917-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி ஜவஹர்லால் நேரு கமலா தம்பதியினருக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு இந்திரா பிரியதர்ஷினி என்று பெயர் சூட்டி  மகிழ்ந்தனர் பெற்றோர். 


அரசியலில் நேரு


           ஜவஹர்லால் நேரு சுதந்திர போராட்டத்தில்

ஈடுபட்டு இன்னல்களுக்கு ஆளாக கூடாது என்று

அவரது தந்தை மோதிலால் எண்ணினார். ஆனால் ஜவஹரின் மனது இந்திய சுதந்திரப் போராட்டத்தை நோக்கியே அவரை நகர்த்தி சென்றது.

தி இன்டிபென்டென்ட் என்ற பத்திரிகையை தொடங்கிய நேரு அதில் சுதந்திர இந்தியா பற்றி பல கட்டுரை எழுதி மக்களிடம் எழுச்சி எழ செய்தார். 1919 -ம் ஆண்டு ரெளலட் சட்டநடவடிக்கையும் ஜாலியன்வாலாபாக் படுகொலையும். நடந்தது. அதை தொடர்ந்து

அமிர்தசரஸில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தலைமை வகித்தவர் நேருவின் தந்தை மோதிலால் நேரு. இந்த மாநாட்டில் காந்தியும், பாலகங்காதரத் திலகரும் கலந்து

கொண்டனர்.நேரு முதன்முறையாக காந்திஜியை சந்தித்தது அந்த மாநாட்டில்தான்..அன்று பேசிய பேச்சால் கவரப்பட்ட நேரு காந்திஜியின் 

சீடராகவே மாறிவிட்டார். ஆங்கிலேயர்களால் சிறைபடுத்தப்பட்டால் தன் மகன் பல இன்னலுக்கு ஆளாவான் என தந்தை மோதிலால் நேரு அவரை போராட்டங்களில்  ஈடுபடுத்தவேண்டாம் என காந்திஜியிடம் வேண்டி

கேட்டுகொண்டார். மகனை சிறைக்கு அனுப்ப விரும்பாமல் அவர் தந்தை இவ்வாறு செய்தாலும் பின் நாள்கள் நேருவின் சுதந்திர தாகத்தால் 

வாழ்வின் பெரும்பகுதியை சிறைசாலையிலே கழிக்க வேண்டியதாக போனது.


சிறையில் நேருவின் வாழ்வு


         1921-ம் ஆண்டு நவம்பர் மாதம் 17-ம் தேதி வேல்ஸ் இளவரசர் இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேரு போராட்டத்தில் ஈடுபட்டதால் 

அவர் இல்லம் புகுந்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுவே அவரின் முதல் சிறை வாழ்வாக தொடங்கியது. அடுத்ததாக ஒத்துழையாமை இயக்கம், சுதேசி இயக்கம் என பல

போராட்டங்களில் கலந்துகொண்ட நேருபல முறை சிறைவாழ்வை ஏற்றுகொண்டும் வாழ்வில் தன் கொள்கையில் திடமாகவே இருந்தார். துணி வியாபாரம் செய்பவர்களை அச்சுறுத்தி வன்முறையில் ஈடுபட்டார் என்று பொய் காரணம் கூறி கூட அவரை சிறையில் அடைத்தது

ஆங்கில அரசு. அவரின் போராட்டங்களில் கலவரப்பட்ட ஆங்கில அரசு இவ்வாறு பல முறை சிறைசாலையிலேயே அடைத்து அவர் போராட்ட உணர்வை முடக்கப் பார்த்தது. ஆனால் எத்தனைநாள் சிறை 

சாலைக்குள் அவரை முடக்கினாலும் வெளிவரும்போது முன்பை விட புதுவேகத்தோடு அவர் பணி நடந்தேறியது.


வெளிநாட்டு பயணங்கள்


         ஜவஹரின் அருமை துணைவியார் கமலாவுக்கு உடல் நிலை குறைவு ஏற்பட மருத்துவ வசதிக்காக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முடிவெடுத்து மகள் இந்திராவையும் அழைத்து கொண்டு 

சுவிட்சர்லாந்து கிளம்பினார். பின் அங்கிருந்து ஜெனிவா சென்றார். அது போலமகள் இந்திராவின் படிப்பு காரணமாகவும் வெளிநாட்டில் தங்க வேண்டிய சூழ்நிலை நேருவுக்கு ஏற்பட்டது. அப்படி தன் குடும்பத்தினருக்காக வெளி நாட்டில் நேரு தங்கினாலும் அங்குள்ள அரசியல் அமைப்புமுறையை தெரிந்துகொண்டு அதனால்  இந்திய சுதந்திரத்திற்கு பயன் பெறமுடியுமா என்ற எண்ணத்திற்கு தான் அப்பயணம் அதிகமான பலனை தந்தது. அங்கும் பல மாநாட்டில் கலந்து

கொண்ட நேரு  மாநாட்டில் ஒன்றில்  இந்தியவிடுதலை என்பது ஏகாதிபத்தியத்திற்கு எதிரான முழக்கம் என்ற தலைப்பில் உரையும் ஆற்றினார்.


தேசிய விடுதலை போரில் நேருவின் பங்கு


         1928-ம் ஆண்டு இங்கிலாந்து அரசு சைமன் கமிஷனை இந்தியாவுக்கு அனுப்பியது. காங்கிரஸார் சைமன் கமிஷனை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்டனர். லக்னோவில் நடைபெற்ற சைமன் எதிர்ப்பு கூட்டத்திற்கு

நேரு தலைமை தாங்கி வழிநடத்தினார். அதுபோல். 1930-ம் ஆண்டு காந்திஜி உப்புசத்தியாகிரகத்தைதொடங்கினார். அந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ம் தேதி ரெய்ப்பூரில் நடைபெறவிருந்த சத்தியாகிர மாநாட்டில் நேரு கலந்துகொண்டார். இதற்கிடையே பீகாரில் பூகம்பம் ஏற்பட்டு ஏராளமான மக்கள் இறந்தனர். ஜவஹர் பீகார் சென்று பூகம்ப இடிபாடுகளை அகற்ற தானே களத்தில் இறங்கினார். இரண்டு வாரம் பீகாரில் பணியாற்றிய அவர் அங்கேயும் பல முழக்கங்களை நிகழ்த்தினார். இவ்வாறு தன் வாழ்வின் பெரும் பகுதியை சிறையிலே கழித்தாலும் வெளியில் வந்தவுடன் மீண்டும் மீண்டும் விடுதலை போராட்டங்களிலே கவனம் செலுத்தினார்.


வாழ்வு அவருக்கு கொடுத்த துயரங்கள்


           1931-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ம் தேதி ஜவஹரின் தந்தை மோதிலால் காலமானார். அடுத்த மூன்றே ஆண்டுகளில் நேருவின் மனைவி கமலா நேரு 1934-ம். ஆண்டு ஆகஸ்ட் மாதம் நோயுற்று படுக்கையில் விழுந்தார். அதேநேரம் நேரு சிறையில் இருந்தாலும்தன் மனைவியை ஜெர்மன் நாட்டிற்கு அனுப்பியும் சிகிச்சை பலனின்றி 1936-ம் ஆண்டு பிப்பிரவரி மாதம் 28-ம் நாள் கமலா இவ்வுலகைவிட்டு மறு

வாழ்வுக்கு சென்றுவிட நேரு துடிதுடித்துப்போனார். மனைவியின் இழப்பு நேருவை மிகவும் துக்கத்திற்கு ஆட்படுத்த அடுத்த வலியாக 1938-ம் ஆண்டு

ஜனவரி மாதம் அவர் அன்பு தாய் சொரூபராணியும் மரணம் அடைந்தார். இத்தகைய மனபாரங்களிலும் ஜவஹர் தன் நாட்டிற்க்கான போராட்டங்களில் பின்வாங்கவே இல்லை.


பாரத பிரதமரான நேரு


          1945 -ம் ஆண்டு இரண்டாம் உலக போர் முடிவுற்ற நிலையில் இங்கிலாந்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. அட்லி பிரபு இங்கிலாந்து 

பிரதமரானார். அந்த நேரம் இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் மூலம் அடங்கிய குழு இந்தியா வந்தது. இந்தியாவிற்கு சுதந்திரம்

வழங்க முடிவு செய்திருப்பதை உரைத்தது. அதன் பிறகுதான் அரசியல் நிர்ணய சபையும்  அதன்மூலம் இடைகால அரசு ஒன்றை அமைக்கவும்

தீர்மானம் உருவாக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியை சேராதவர்  உட்பட பலரையும் அழைத்து அரசியல் நாணய சபை உருவாக்கப்பட்டது. அதன் மூலம் இடைக்கால அரசும் அமைக்கப்பட்டது. ஜவஹர்லால் நேரு இடைக்கால அரசின் முதல் பிரதமராக 1946-ம் ஆண்டு செப்டம்பர் 2-ம் நாள் பதவி ஏற்றுக்கொண்டார்.


சிறப்பான ஆட்சிமுறையில் இந்தியா


          நேரு பதவி ஏற்றதும் இந்தியாவில் நிலவி வந்த இந்து முஸ்லிம் பிரச்சினைக்கு தீர்வுகாண முடிவு செய்து முஸ்லிம்கள் அதிகம் வாழும் பாகிஸ்தானை தனிநாடாக அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கை

எழுந்தது. 1945-ம் ஆண்டு மாகாண தேர்தலில் காங்கிரசே பெரும்பான்மை பெற அதை காரணம் காட்டி பிரிட்டீஷ் அரசு காங்கிரஸ் கட்சியையே

இடைகால அரசு அமைக்க வழிகோலியது. அதேநேரம் கிழக்கு வங்காளத்தை சேர்ந்த நவகாளி பகுதியில் இந்து முஸ்லீம் கலவரம் வெடிக்க ரத்த ஆறு ஓடியது. இதன் முடிவாக தான் 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் நாள் இந்தியாவுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டது. பாகிஸ்தானும்

தனிநாடாக பிரிந்தது.அதன் பின் பிரதமரான நேரு இந்தியாவின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பல திட்டங்களை அறிவித்தார். 

அவற்றை செயல்படுத்தவும் தொடங்கினார். 1950-ம் ஆண்டு குடியரசு நாடாக அறிவித்த பிரதமர் முதல் குடியரசு தலைவராக பாக்டர். ராஜேந்திர பிரசாத்தை பொறுப்பேற்றுகொள்ள செய்தார். அதன் பின் இந்தியாவின் வளர்ச்சி உணவு, விவசாயம் , தொழில் ஆகியவையே என்று உணர்ந்த நேரு அவர்கள் அவற்றில் அதிக அக்கறை செலுத்த இந்தியா வளர்ச்சி பாதையில்  பயணிக்க தொடங்கியது.


உலகத்தோடு கைகோர்த்த இந்தியா


     நாட்டின் வளர்ச்சிக்காக பல நாடுகளோடு கை கோர்த்து கொண்டார்.நேருவின் ரஷ்ய பயணம் முதன்முறையாக இந்திய ரஷ்யாவுடனான நல்லுறவை பெற்று தந்தது.அது போல பஞ்சசீல

கொள்கையை உருவாக்கி சீன இந்தியா இடையில் நட்புறவை ஏற்படுத்தினார். இந்தியாவின் உற்பத்தியை பெருக்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலையையும் உருவாக்கினார். அதுபோல நிலக்கரி சுரங்கம். ரயில்பெட்டி தொழிற்சாலைகள், ராணுவ வாகன தொழிற்

சாலைகள், கப்பல் தொழிற்சாலைகள், விமான தொழிற்சாலைகள், உருக்கு ஆலைகள், ஃபோட்டோ பிலிம் தொழிற்சாலைகள் இந்தியாவில் உருவாக்க

பல முயற்சிகளை மேற்கொண்டார். பண்டித ஜவஹர்லால் நேருவின் கூட்டுசேராக் கொள்கையும் ஐந்தாண்டு திட்டமும் உலக புகழ்பெற்றவையாக  விளங்கியது.


மனிதருள் மாணிக்கம் நேரு


        1947-ம் ஆண்டு தொடங்கி 1964 - ம் ஆண்டு வரை 17. ஆண்டுகள் இந்தியாவின் பிரதமராக பதவிவகித்து வந்தார் ஜவஹர்லால் நேரு. முதுமையை எட்டி விட்டபோதும் இந்திய நாட்டிற்காக நாள்

தோறும் பதினெட்டு மணி நேரம் உழைத்த தலைவர் அவர். தந்தை, மனைவி , தாய் என அடுத்தடுத்து மரணங்களால் தன் உறவுகளை இழந்த நேரு அதிகம் நேரம் பேச துடித்தது குழந்தைகளிடம்தான்அவர் குழந்தைகளிடம் கொண்டிருந்த  அபரிமிதமான அன்பை உணர்ந்தே அவரது பிறந்தநாளாம் நவம்பர் 14-ம் நாள் குழந்தைகள்

தினமாக கொண்டாடி வருகிறோம்.அவரின் சீரிய தொண்டும் நாட்டிற்காக தன் வாழ்வை முழுதும் அர்ப்பணித்த அவர் உயர்ந்த குணத்-

திற்காகவும் இந்தியாவின் உயரிய  விருதான பாரத ரத்னா விருது அவருக்கு வழங்கப்பட்டது.


முடிவுரை


       ஜாலியன்வாலாபாக் கால் உந்தப்பட்டு விடுதலை வேட்கை கொண்டாயே!.... வேந்தன் போல வாழ வழியிருந்தும் ஊருக்கே அமுதம் படைக்க வசதியிருந்தும் நாட்டிற்க்காய் சிறை சாலை நுழைந்தாயே

மனிதருள் மாணிக்கமானாயே!..... நயவஞ்சகரிடமிருந்து நாட்டை பிடுங்கி எடுத்து உன் கையில் கொடுத்தால் பத்திரமாய் இருக்குமென....

உத்தமன் காந்தியே முன்னறிவித்தானே!... அத்தகைய சீரிய ஒரு தலைவரின் இழப்பு இப்பாரத தேசம் பெற்ற பெரும் இழப்பாகும்.

அன்று அவரின் சிறு விதைதான் இன்று வளர்ச்சியடைந்து உலக நாடுகளில் வளர்ந்த நாடுகளின் பட்டியலில் நம்மை போய் அமர செய்தது. மனிதருள் மாணிக்கமாக விளங்கிய பண்டித ஜவஹர்லால் நேருவின் பொன்னுடல் மறைந்தாலும் அவர் தாய் திருநாட்டு மக்கள் மனதில் மட்டுமல்ல உலக மக்களின் மனதிலும்  வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.


Post a Comment

0 Comments