கடவுள் ஒரு மணி நேரம் என் வீட்டில்
தங்கி சென்றார்....
யாராவது கடவுளை நான் பார்தேணோ இல்ல அவர் என் வீட்டுல வந்து தங்குனார்ணோ சொன்னா... உண்மையிலே நான் சிரிச்சிடுவேன். ஏன் பொய் சொல்லி ஏமாற்ற வேற எதுவுமே உங்களுக்கு கிடைக்கலியாணு நக்கல் பண்ணியிருக்கேன். ஆனா என் வாழ்க்கையில அப்படி ஒரு நிகழ்வு நடந்தப்ப என்னோட உடம்பே புல்லரிச்சி போச்சு.
அப்போ என் வாழ்வோட மோசமான காலகட்டம். வாழ்க்கையில பல துயரங்களை கடந்து பல கஷ்டங்களை சுமந்து வாழ்ந்திட்டிருந்தேன். வலி, வேதனை, துன்பம், துயரம் இதுதான் அன்றைய நாள் என்னோட நிலமை. அதனால எது மேலும் ஈடுபாடு இல்லாம ஒரு வாழ்வு வாழ்ந்தேன்.
இப்படியான மனநிலையில இருந்த ஒரு நாள்...அதாவது டிசம்பர் மாதம் 1-ம் தேதி எங்க அன்பியத்துல பஜனை வர கூடிய நாள். பஜனை என்றால் என்னவென்று கிறிஸ்தவர்களுக்கு தெரியும். தெரியாத பிறமதத்து தோழிகளுக்காகவும், தோழர்களுக்காகவும், சொல்கிறேன்.
ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்து பிறப்பு விழாவின் தொடக்கமாகவும் கார்த்திகை மாத தொழுநோயில் இருந்து மக்களை காத்து கொள்ள வேண்டியும் பண்டைய காலங்களில் தொழு நோயாளிகளின் பாதுகாவலராய் இருக்கும் புனிதர்களின் சுரூபங்களை வீடுவீடாக கொண்டு செல்வது வழக்கம். அந்த பழக்கம் இப்போதும் ஒவ்வொரு ஆலயத்திலும் டிசம்பர் மாதம் செயல்படுத்தி வருகிறார்கள்.
அன்று அந்த பஜனை எங்கள் தெருவுக்கு வரும் நாள். என் அன்பிய இறைமக்கள் எல்லாரும் தத்தம் வீடுகளில் ஸ்டார் போடுவது விதம் விதமான மின் விளக்கு அலங்காரங்கள் செய்வது வீட்டின் முன் கோலம் போடுவது என ஆண்டவரின் வருகைக்காக தங்கள் இல்லங்களை ஆயத்தம் செய்து கொண்டிருந்தனர். நான் அந்த சமயம் தான் வேலை முடித்து வீட்டிற்க்கு வந்து கொண்டிருந்தேன்.
வர வர... ஒவ்வொரு வீட்டின் அலங்காரத்தையும் பார்த்து கொண்டே என் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தேன். மனதில் இனம் புரியாத வெறுமை. உதட்டில் விரக்தி புன்னகை. என் வீட்டின் காம்பவுண்டுக்குள் நுழைந்தேன். என் வீடு மட்டும் கலை இழந்து கிடந்தது. வீட்டின் முன் பகுதி அலங்காரமின்றி இருந்தது. மனதின் வெறுமை என்னிடமே பேச தொடங்கியது
அதனால் விரக்தி புன்னகை ஒன்று என்னை அறியாமல் வெளிபட்டது. அதனூடே என் வாய்...
கடவுள் நம்ம வீட்டுல வந்து தங்கவா போறாரு. இப்படியே இருக்கட்டும். அவருக்குதான் அலங்கார வீடுகள் நிறைய இருக்கின்றனவே.
மனதின் வெறுமை இப்படி பேசி ஒய்ந்த நேரம் பெரிதாக எதுவுமே செய்யாமல் அமைதியாக முன் வாசலிலே இருந்தேன். முன்வாசலில் இருந்தேன். பஜனையோடு சென்ற என் குழந்தைகளும் வேலைக்கு சென்றிருந்த என் கணவரும் வீடு வந்து சேர்ந்தனர். என் குழந்தைகள்...
ஏம்மா நம்ம வீட்டுல மட்டும் அலங்கார விளக்குகளே போடல. எல்லார் வீட்டிலும் என்னமா அலங்கரிச்சிருக்காங்க தெரியுமா? என குழந்தை பருவ ஆசையில் வாய்மூடாமல் சொல்லி கொண்டே இருந்தன.
நானும் எதுக்கும்மா கடவுள் தான் நம்மளை புறக்கணிச்சிட்டாரே...அவர் என்ன நம்ம வீட்டுல எல்லாம் வந்து தங்கவா போறாரு. பேசாம இரு. எல்லாம் போதும்ணு விரக்தியில சொன்னேன். என் கணவர் ஆளுக்கு 20 போய் தந்து பஜனைக்கு காணிக்கை வைங்கணு சொன்னாரு. அன்று இருந்த நிலமைக்கு அதுவே அதிகம் தான். எனவே பேசாமல் வாங்கி கொண்டேன். பஜனையும் வந்தது. ஆனால் உண்மையில் என் வீட்டில் தங்கி செல்ல இறைவன் வருகிறார் என என் வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளி பஜனை வந்த போது கூட நான் நினைக்கவில்லை.
இப்போது என் வீட்டின் பக்கத்து வீட்டில் பஜனை நின்றது. அந்த வீட்டில் இருந்து என் வீட்டிற்கு இருபது அடி தான் தூரம் இருக்கும் அந்த இடைவெளிக்குள் ஒரு பேய்காற்றும் மழையும் வந்தது பாருங்கள். அதுதான் அதிசயம். மழைக்கான எந்த சுவடுமே இல்லாமல் அப்படி ஒரு மழையை எதிர்பாராத இறைமக்கள் அனைவரும் ஒடி வந்து என் வீட்டில் ஒதுங்கினார்கள்.
அன்று பஜனை என் வீட்டில் ஒரு மணி நேரம் இருந்தது. அப்போது கூட பெரிதாக எனக்கு உறைக்கவில்லை. போகும் போது அக்கூட்டத்தில் ஒருவன் சத்தமாக அதுவும் எல்லாருக்கும் கேட்கும் சத்தத்தில் சொன்னான். பாருங்கள் ஒரு வார்த்தை அதை இன்று நினைத்தாலும் மெய் சிலிர்க்கிறது.
பாத்தீங்களா... கடவுள் ஒரு மணி நேரம் இந்த வீட்டுல தங்கிட்டு போகணம்ணு நினைச்சிருக்காரு. அதான் தங்கிட்டாரு...
அந்த மனிதர் சொன்ன நொடி என் நெஞ்சை யாரோ அறைந்து சொல்வது போல இருந்தது. விழியில் விழி நீரோடு என் வீட்டில் இருந்த இறைமகன் யேசுகிறிஸ்துவின் புகைபடத்தை பார்த்தேன்.
அவர் இன்று ஏனோ அதிகமாக சிரித்துக் கொண்டிருப்பது போல் எனக்கு தோன்றியது. அதே நேரம் மனதில் இதுவரை குடிகொண்டிராத ஒரு பரவசத்தையும் ஆனந்தத்தையும்
கண்டேன். உண்மையில் இறைவன் இருக்கிறார்.நான்உணர்ந்த நொடி என்மெய் சிலிர்த்த்து. நீங்கள் இப்படி உணர்ந்த தருணம் உண்டா?...
……………………………………………….
நான் உணர்ந்தது போல நீங்க உணர்ந்த தருணம் இருந்துச்சுனா மறக்காம
comment-ல சொல்லுங்க... வேறு ஒரு நாள் வேறு ஒரு நல்ல அனுபவத்தோடு உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெறுவது உங்கள் செல்வம்....

0 Comments